புற எழுத்துகள்-நடு குழுமம்

நிகழ்வுகள் :

0000000000000000000000000

0000000000000000000000000

0000000000000000000000000

0000000000000000000000000

0000000000000000000000000

0000000000000000000000000

0000000000000000000000000

000000000000000000000000

புற எழுத்துகள்

01 நூல் பற்றிய குறிப்பு :

அரசாங்கங்கள் தமது ஒற்றைத் தன்மையுடைய வழிமுறைகளை தமக்கான அதிகாரங்களை தக்கமைத்த  நாட்டில், தான் வாழ்ந்த – எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல் சிக்கல்களை அதிகார சமமின்மைகளை வன்முறைகளை சனநாயக மீறல்களை அதிகாரத்திற்கு எதிராக நின்று பேசுகின்ற கவிதைகள் கற்பகம் யசோதரவினுடையவை. ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் அரசியலை – எதிர்கொண்ட கீழைத்தேய வன்முறைகளை மேலைத்தேய அரசின் வன்முறையுடன் ஒப்பிடுவதூடாக – சிறுபான்மையினராய் எங்கும் இணைந்துவிடாத அசமத்துவத்தின் பயங்களையும் அதன் அரசியலையும் இவை பேசுகின்றன.

‘எனது மகள் கேள்வி கேட்பவள்’ வளர்ந்து கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களுடன் முரண்படப் போகின்ற மகள்களை எதிர்வுகூறுவது. சமத்துவமற்ற இந்த வாழ்வில் –  முரண், இயல்பு. ஆதலால் முரண்படவும் தங்கிப் போதலன்றி ஒப்புவித்தலன்றி அநீதிக்கெதிராய் கேள்வி கேட்கவும் ஒன்றிணையவும் வேண்டிநிற்கின்றன இக் கவிதைகள்

நூலின் பெயர் : எனது மகள் கேள்வி கேட்பவள்

ஆசிரியர் : கற்பகம் யசோதர

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : வடலி பதிப்பகம்

விலை : தெரியாது

தொடர்பு : வடலி பதிப்பகம் /கற்பகம் யசோதர

00000000000000000000000000

02 நூல் பற்றிய குறிப்பு :

தொந்தா விக்டோரியா

தமிழில்: தேவா

அர்ஜென்டீனாவில் 1976-இல் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு அதன் வரலாற்றிலேயே கர்ணகொடூரமானதான சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தது. முப்பதாயிரம் வரையான மக்கள் கடத்தப்பட்டார்கள். சித்திரவதைக்குள்ளானார்கள். ஈற்றில் ‘காணாமல் போனார்கள்.’ அக் காலத்தில்தான் கர்ப்பிணிகளாயிருந்த அரசியல் கைதிகளுக்குப் பிறந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருண்மைக்குள் சபிக்கப்பட்டிருந்த அவர் தாய்மாரிடமிருந்து திருடப்பட்டு இராணுவத்துடன் தொடர்புடையவர்களிடமோ அந்த சர்வாதிகார ஆட்சிக்கு துணைசெய்தவர்களிடமோ ஒப்படைக்கப்பட்டார்கள். அவ்வாறு கொடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவள்தான் அனாலியா. தான் தத்தெடுக்கப்பட்டவள் என்பதையே சந்தேகிக்காது வளர்ந்த அவள், தனது 27வது வயதில் தான் தனது பெற்றோர் தனதல்லர் என்றும் தனது பெயரே தன்னுடையது அல்லவென்றும் அறிகிறாள்.

‘எனது பெயர் விக்ரோரியா’ எனும் இந் நூலில் தனது கதையை அனாலியா அல்ல விக்ரோரியாவே எழுதிச் செல்கிறாள். அதன் பக்கங்கள் ஊடே ப்யூனஸ் அயர்ஸின் புறநகர் பகுதிகளில் ஒரு செழிப்புமிக்க மத்தியதரவர்க்கத்தில் வளர்ந்தவளான தீவிர அரசியல் பிடிப்புகளை உடைய ஓர் இளம் பெண்ணை நாம் அறிகிறோம். தன் உற்றவராய் எண்ணியிருந்தவர்களே தனது பெற்றோரின் கொலைக்கும் பின்னர் தான் கடத்தப்பட்டு தத்தெடுக்கப்பட்டதற்கும் காரணகர்த்தாக்களும் என்பதை அறிவதிலிருந்தே தனதடையாளங்கள் குறித்த உண்மையைத் தேடிய அவளது பயணமும் தொடங்கியது. இன்று விக்ரோரியா அர்ஜென்டீன பாராளுமன்றத்தில் மிக இளம் வயது உறுப்பினர். தனது அடையாளத்தையும் சொந்த பெயரினையும் மீட்டுக்கொண்டு விட்டவர். இன்று அவர் அனாலியா அல்ல, விக்ரோரியா டொண்டா!

ஸ்பானியமொழியில் எழுதப்பட்ட இந்தப்புத்தகம் DR.Stefanie karg இனால் ஜேர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதன் வழியாகத் தேவாவினால் தமிழுக்கு கொண்டு வரப்படுகிறது.

நூலின் பெயர் : என் பெயர் விக்டோரியா

ஆசிரியர் : தேவா

பகுப்பு : மொழிபெயர்ப்பு

வெளியீடு : வடலி பதிப்பகம்

விலை : தெரியாது

தொடர்பு : வடலி பதிப்பகம் /வடலி பதிப்பகம்

00000000000000000000000000

03 நூல் பற்றிய குறிப்பு :

ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச் சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் நினைவுச் சித்திரம். வானொலி, தொலைக்காட்சி, மேடை, திரைப் படக்கலைஞர், நேர்முக வர்ணனையாளர், திரைப்பட இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு.கே.எஸ்.பாலச்சந்திரன், மிகச் சிறந்த வானொலி மற்றும் மேடை நாடகங்களையும் படைத்த எழுத்தாளர். தன் எழுத்தால் வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச் செல்லக் கூடிய ஆற்றல் கொண்டவனே ஒரு சிறந்த எழுத்தாளனாக முடியும். இவரது எழுத்துக்களுக்கு அவ்வாற்றல் உண்டு. கரையைத் தேடும் கட்டுமரங்கள் நாவல் படைத்த, கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது பெயரும் வரலாற்றில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்.

B.H அப்துல் ஹமீத்

நூலின் பெயர் : கரையைத்தேடும் கட்டுமரங்கள்

ஆசிரியர் : கே.எஸ்.பாலச்சந்திரன்

பகுப்பு : நாவல்

வெளியீடு : வடலி பதிப்பகம்

விலை : 200 IRS

தொடர்பு : வடலி பதிப்பகம்

00000000000000000000000000

04 நூல் பற்றிய குறிப்பு :

இஸ்ரேல் : யூதர் என்ற ஒப்பீட்டை, ஈழம் : தமிழர்கள் என்றவாரு நிருவ முயலும் எழுத்துக்களும், பேச்சுகளும் அண்மை காலத்தில் அதிகரித்திருக்கின்றன. இதில் சில அடிப்படை உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி விரும்புபவர்களின் கோணம் என்பது பெரும்பகுதி தூய்மைவாத அரசியலில் இருந்தும், அமெரிக்க சார்பு நிலையில் இருந்தும் வெளிப்படுவதை காண்கிறோம்.

இத்தகைய அம்சங்களை உள்ளடக்கி கலையரசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகமானது, இஸ்ரேலும், ஈழமும் பொருந்திப்போகும் மற்றும் விலகிச் செல்லும் புள்ளிகளை வரலாற்று நோக்கில் அணுகுகிறது. இந்த பேசுபொருளை ஒரு மைய அச்சாகக் கொண்டு உலக அரசியலையும் ஆழமான நோக்கில் விவரிக்கும் இந்நூல் ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் உடனடி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!

நூலின் பெயர் : ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

ஆசிரியர் : கலையரசன்

பகுப்பு : கட்டுரைகள்

வெளியீடு : வடலி பதிப்பகம்

விலை : 50 IRS

தொடர்பு : வடலி பதிப்பகம் / கலையரசன்

00000000000000000000000000

05 நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : எல்லையற்ற பெருவெளி

ஆசிரியர் : க.முத்துராஜா

பகுப்பு : கவிதைகள்

வெளியீடு : ஜீவநதி பதிப்பகம்

விலை : 450 IKR

தொடர்பு : க.முத்துராஜா/ஜீவநதி பதிப்பகம்

0000000000000000000000

06 நூல் பற்றிய குறிப்பு :

00000000000000000000

நூலின் பெயர்: கவிதை தொகுப்பு
ஆசிரியர்: பவானி தம்பிராஜா
பகுப்பு: கவிதைகள்
வெளியீடு: Uitgeverij Boekscout
Nieuweweg 109
3765 GC Soest
The Netherlands
விலை: 5 euro
தொடர்பு: Bhawany65@gmail.com

(Visited 163 times, 1 visits today)