புற எழுத்துகள்-நடு குழுமம்

நூல் பற்றிய குறிப்பு :

இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்ஷ்மி சரவணகுமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத் துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்ஷ்மி சரவணகுமாரின் உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.

நூலின் பெயர் : உப்புநாய்கள்

ஆசிரியர் : லட்சுமி சரவணகுமார்

பகுப்பு : நாவல்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

விலை : 300 இந்திய ரூபாய்கள்(IRS)

தொடர்பு : டிஸ்கவரி புக் பேலஸ்

000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

நூலின் பெயர் : பாரிஸ்

ஆசிரியர் : அரிசங்கர்

பகுப்பு : குறுநாவல்

வெளியீடு : தமிழ்வெளி

விலை : 140 இந்திய ரூபாய்கள் (IRS)

தொடர்பு : தமிழ்வெளி

000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

தமிழ் நாவல் கலையின் பெருமிதம் ப.சிங்காரம். நவீன தமிழ் எழுத்துக்களின் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும், வாழ்வியலோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது. அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதி இருக்கிறார். இரண்டுமே தமிழ்நாவல் பரப்பின் எல்லைகளை விஷ்த்தரித்திருப்பவை. அந்த இரண்டுதான் கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி

நூலின் பெயர் : புயலிலே ஒரு தோணி

ஆசிரியர் : ப சிங்காரம்

பகுப்பு : நாவல்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

விலை : 290 இந்திய ரூபாய்கள் (IRS)

தொடர்பு : டிஸ்கவரி புக் பேலஸ்

000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

அவள் கைகளில் குத்திருந்த பச்சையின் வினோத வடிவங்களில் ஒளிந்திருந்தது அந்தப் பட்சி. நுட்பமான குஞ்சங்களின் சித்திரக்கரை கட்டிய கருத்த கோடுகள் மரபின் கலைத் தன்மையுடன் நெளிந்து உள்நோக்கிச் சுழன்றோடி உடம்பெங்கும் மிளிர்ந்த விந்தைமிகு தோற்றங்களில் பழுப்பு நிற ரெக்கைகள் அசைகின்றன. சற்றுமுன் திரும்பிய அவளது கண்களில் ஒளிர்ந்த பறவையின் முறுவல் அசையாடிக் கொண்டிருந்த புலனில், அவளைப் பற்றிய விபரீத உணர்வுகள் தனக்குள் அடரக் காரணமென்ன என்று யோசித்தான். அவளது கைகளில் சுருண்ட பச்சைக் கொம்புகள். வட்டச் சமைவுகளாய்ப் புரண்டிருந்த அதன் ஈர்ப்பு விசை அவனைக் கொளுவியிழுத்த சற்றைக்கெல்லாம் கண்டான், அவள் உடல்மீது எழுதியிருந்த புதிர்மொழியின் கண்ணிகளில் தன் கால்கள் நுரைதள்ளிக் கொண்டிருப்பதையும், ஓயாமல் எழுதிச் செல்லும் ஒற்றை இறகையும்.

நூலின் பெயர் : பச்சைப் பறவை

ஆசிரியர் : கௌதம சித்தார்த்தன்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எதிர்

விலை : 130 இந்திய ரூபாய்கள் (IRS)

தொடர்பு : எதிர்

000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

உயிர்த்திருத்தலுக்கும் உயிரழித்தலுக்குமிடையிலான, உயிர்ப்புடன் இருத்தலுக்கும் உயிரியாக மட்டும் இருத்தலுக்கும் இடையிலான  ஓயாத இயங்கியலை விளக்கும் அந்த நூலின் மையம் வன்முறைதான். அடிமைப்படுத்தலின் வன்முறை, விடுதலைக்கான வன்முறை, ஓசையற்ற வன்முறை, ஓலமிடும் வன்முறை…

நூலின் பெயர் : நந்தன் நடந்த நான்காம் பாதை

ஆசிரியர் : பிரேம்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எதிர்

விலை : 160 இந்திய ரூபாய்கள் (IRS)

தொடர்பு : எதிர்

000000000000000000000000000000

நூல் பற்றிய குறிப்பு :

மன இயக்கத்தின் சிக்கலான திசைகளைச் சித்தரிக்கும் முயற்சிகளாக காலபைரவனின் சிறுகதைகளைச் சொல்லவேண்டும். அதுவே அவருடைய கதைக்களம். சிக்கலின் தன்மையைச் சொல்வதற்குப் பொருத்தமாக பல தருணங்களில் இறந்தகாலமும் நிகழ்காலமும் இவருடைய படைப்புகளில்

நூலின் பெயர் : புலிப்பானி ஜோதிடர்

ஆசிரியர் : காலபைரவன்

பகுப்பு : சிறுகதைகள்

வெளியீடு : எதிர்

விலை : 150 இந்திய ரூபாய்கள் (IRS)

தொடர்பு : எதிர்

 

 

 

 

 

 

(Visited 98 times, 1 visits today)