இனம், வரலாறு, மற்றும் உடல்: காட்சிப்படுத்தப்படும் மனிதநேயம்-கட்டுரை-மேத்யு ஷெனோடா-தமிழில் தேசிகன் ராஜகோபாலன்

தேசிகன் ராஜகோபாலன்நவம்பர் மாதத்தின் ஒரு சனிக்கிழமை பிற்பகல் வேளையில் சிகாகோவின் ஹைட் பார்க் அருகில் நான் எனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கையில் என்னை நான் அறிந்து கொண்டதுடன், சிகாகோ பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி நடப்பதென்று தீர்மானித்தேன். எனது மகளுக்கு அப்பொழுது ஐந்து வயது முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது அந்த வயதிற்குரிய வெட்கமும் அவளிடம் இருந்து வெளிப்பட்டது. அதனை சாதகமாக்கி அவளுக்கு நான்கரை வயதுதான் என்று பெருமையாக பீற்றிக்கொண்டேன். ஒரு நாற்கரக் கோட்டிற்குள் மரத்திலிருந்து விழுந்த இலைகள் மற்றும் குச்சிகளைக் கொண்டு, ஆங்கில எழுத்து சிஐப் போன்று வளைந்திருந்ததை யு வடிவில் வளைத்து சிற்பங்களைச் செய்து கொண்டிருந்தனர் நாங்கள் ஓரியண்டல் இன்ஸ்டிடியூட்டில் பிரமித்து நின்றதுடன் சிறிது பதற்றத்துடன் உள்ளே செல்ல முடிவுசெய்தோம்.

நாங்கள் உள்நுழையும்போது ஏனைய அருங்காட்சியகங்களில் காணப்படுவது போன்ற நிர்ணயிக்கப்பட்ட கட்டண விபரங்களைக் காணவில்லை. அதற்கு மாறாக, நிதியுதவி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய கல்வெட்டினைக் கண்டுகொண்டோம். நாம் இத்தகைய அருங்காட்சியகங்களில் எதனை எதிர்பார்க்க முடியும் என்பதை அறிந்துகொண்டே அதற்குள் நுழைந்தோம், நானும் எனது மனைவியும் பரஸ்பர புரிந்துணர்வுடன் இத்தகைய நிறுவனத்திற்கு எவ்வளவு பெரிய மனதுடன் ஏராளமான நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்று ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே எமது வாலட்களை இறுகப்பிடித்தபடி உள்நோக்கி நடந்தோம்.

நாங்கள் அந்த அருங்காட்சியகத்தினுள் பிரவேசித்ததும் பண்டைய மெசொப்பொத்தேமியாவின் எழுத்துருக்களைப் பார்த்துக் கொண்;டே நடந்தோம் எழுத்தின் வர்ணிக்க முடியாத பரிணாம வளர்ச்சியைக் கண்டு திகைத்து, வாய்மொழிக் கதைகளையும் பாறையில் பொறிக்கப்பட்டவைகளையும் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களாகப் பயன்படுத்தப்பட்டன, அந்தப் பாடங்கள் அவர்கள் அந்த வரலாற்றுக் காலப்பகுதிக்குள் தாமே பயணிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தின அது அவர்களது குழந்தைப் பருவத்தை வழிநடத்தியது.

மிக நீண்ட காலத்திற்கு முன்னர் நாம் எகிப்திய கண்காட்சிக்கு வந்திருந்தோம். தற்கால மற்றும் பண்டைய எகிப்திய எழுத்துகளின் சில சுருள்களைப் பார்வையிட்டபொழுது அவை இரண்டுக்குமிடையில் பிரிக்கமுடியாத உறவிருப்பதை ஆராயும் நோக்கில் பார்வையைச் செலுத்தத் தொடங்கினேன். குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கையில், “இவை 12 அப்போஸ்தலர் (மதபோதகர்)களின் பெயர்கள், மத பற்றிற்காகவோ அல்லது மந்திர சடங்கிற்காகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம்” என்று பண்டைய எகிப்திய மொழியில் எழுதப்பட்டிருந்த வித்தியாசமான விளக்கம் எனது கவனத்தை ஈர்த்தது. அது என்ன மந்திர சடங்கு? என்னே ஒரு வினோதமான மொழிப்பிரயோகம் என்று சிந்தித்தேன். எனது வாழ்நாளை பண்டைய எகிப்திய கிறிஸ்தவ தோவாலயங்களில் கழித்தவன் என்ற அடிப்படையிலும் அந்த மதத்தின் இறைச்சிந்தனையில் ஊறித்திளைத்தவன் என்ற அடிப்படையிலும் ‘மந்திர மதச் சம்பிரதாயம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து அது எந்த பொருளில் கையாளப்பட்டிருந்தாலும் அது கிறிஸ்தவ மதத்தை எந்தவகையிலும் பாதிக்காது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆனால் நாம் பிரார்த்தனை என்று அழைக்கிறோமே அதனை வேண்டுமானால் காலனியாதிக்கவாதிகள் மந்திரமாகப் பார்த்திருக்கக்கூடும். ஆனால், எங்கள் கலாச்சாரம் கொள்ளையடிக்கப்பட்டு அதன் அனைத்து கலைப்பொருட்களையும் அவற்றின் சரியான அர்த்தங்களையும் பறிக்கும் தருணத்தில் நிச்சயமாக எனது மக்கள் ஏதேனும் மாயாஜாலம் நிகழாதா என்று ஏங்கியிருப்பார்கள்.

நான் எனது தோள்களை ஏற்றியிறக்கி காட்சிப்படுத்தப்பட்டிருந்தவற்றை தொடர்ந்தும் பார்வையிட்டேன். காதுகேட்கும் தூரத்திலிருந்து ஒரு இளமாணி மாணவன் (அவர் எகிப்தைப் பற்றிப் படிப்பதற்காக பட்டப்படிப்பில் இணைந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை) உற்சாகத்துடன் ஒரு தம்பதியினருக்கு, அவர்களின் தோற்றத்தைப் பார்க்கின்ற பொழுது அவர்கள் அவரது பெற்றோர்களாக இருக்க வேண்டும்; பண்டைய எகிப்திய கலாசாரம் பற்றி அக்குவேறு ஆணிவேறாக விளக்கிக்கொண்டிருந்தார். அவர் விளக்கிய விதம் மற்றும் அவரது உணர்வுபூர்வமான நம்பிக்கை ஆகியவை எனக்கு மிகவும் பழக்கமானவை, அவை பாடநூலில் இடம்பெற்றிருந்தவை; எந்தவிதக் கலாசார தொடர்புமின்றி, கலாசார உறவுமின்றி புத்தகத்தில் படித்து மனப்பாடம் செய்ததை வைத்து உறுதியுடன் விளக்கிக்கொண்டிருந்தார். அந்த தருணம் எனக்கு துண்டிக்கப்படுவதற்கான ஒரு தனித்துவமான உணர்வைக் கொடுத்தது; இங்கே நாங்கள் மூன்று எகிப்தியர்கள் அவருக்கு மிக அருகில் ஐந்தடிக்கும் குறைவான தூரத்தில் மூன்று எகிப்தியர்கள் நின்றிருந்;தோம் என்பது அவருக்கு எப்படித் தெரியும்? நவீனத்துவமான எமக்கு எமது முன்னோர்களுடனான தொடர்பு மிக அரிதாகவே உள்ளது; அத்தகைய தொடர்பு எம்மை வலிந்து உருவாக்குவதினின்று உண்மையாகவே பன்முகத்தன்மை கொண்டவர்களாக உருவாக்கியிருக்கும். அது நமக்கு முன்னால் இருக்கும் அனைத்து கலைப்பொருட்களுடன் நாம் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் எனற கேள்வியை நிச்சயமாக எம்முன் வைத்திருக்கும். எமக்கிடையில் நாம் பார்த்திருந்தவற்றிலிருந்து எமது பார்வையை திசைதிருப்புகின்ற தெளிவான அல்லது தெளிவற்ற கோடு ஒன்று இருந்தது. எனவே நாம் அனேகமாக இந்த வழியிலேயே பயணித்து வரலாற்றைப் பிரிக்கிறோம், அதற்குள்ளேயே எமது உடலைப் பிரித்து வைத்துக்கொண்டு கடந்த காலம் கடந்த காலம் என்று பிதற்றுகிறோம்.

எனது மகளின் கையைப் பிடித்தபடி, ஒரு மூலையில் திரும்பினோம், அங்கு சிறுவன் ஒருவனின் நின்ற நிலையிலான உடலைக் கண்ணுற்றோம். அந்தப் பேழையின் அடியில் எழுதியிருந்த குறிப்பின்படி அவருக்கு ஐந்தரை வயது. அந்த பிஞ்சு வயதிலேயே அவர் மரணித்ததன் காரணமாகப் பதப்படுத்தப்பட்டு பேழையில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் எங்களுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை, அவரது காலத்தைக் காப்பாற்றுங்கள் அவர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியை விடவும் மாதக் கணக்கில் அவர்களால் துல்லியமாகச் சொல்ல முடியும். எனது மகளைப் போலவே, பாற்பற்கள் முளைக்கும் பிறந்தநாளில், அந்த அருங்காட்சியகத்தின் குறிப்பு எனது மகளைவிட அரையாண்டு அதிகம் எனக் குறிப்பிட்டது. அது அவனை எனக்கு நன்கு பரிச்சயமானவனாகக் காட்டியதுடன் அவனுடைய பிறப்பு மற்றும் வாழ்க்கை முறையையும் கூட எனக்குத் தெரியும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. அந்த உடலத்தின் முன் நான் நிற்கையில், அவரது குடும்பமும் சமுதாயமும் அவரது இழப்பினால் எந்தளவிற்கு இதயத்தில் வலியை உணர்ந்திருப்பார்கள் என்று நினைத்ததைத் தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை, சில விடயங்களை நாம் அறிந்துகொள்ளும்போது அது எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தது என்றோ அதன் பின்னணி என்னவென்றோ, எத்தகைய சூழலில் இடம்பெற்றது என்றோ, அக்கறைகொள்வதில்லை. ஒரு ஐந்து வயதுச் சிறுவனின் மரணம் என்பது வாழ்க்கை குறித்து எச்சரிக்கை செய்யும் குறியீடு, அது அஞ்சலி செலுத்துவதற்கான நேரம், ஆழ்ந்து பிரார்த்திக்கும் தருணம்.

சிகாகோவில் எனக்கு முன்னால் ஒரு கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை நான் உற்று நோக்கிய போது எமது மக்களின் மரபுகள் அது கடந்த காலமானாலும் நிகழ்காலமானாலும் சரி ஒரு மத அமைப்பினால் சபிக்கப்பட்டதாகவோ அல்லது தள்ளிவைக்கப்பட்டதாவோ இருப்பதை உணர்த்தியது. எனது உணர்வுகளையும் கோபத்தையும் காயத்தையும் மகளின் முன் வெளிப்படுத்த விரும்பாதவானாக அடக்க முயற்சித்தேன்.

பின்னர், “1895 இல் எகிப்தில் வாங்கப்பட்டது” என்று பொறிக்கப்பட்டிருந்த சிறிய கல்வெட்டைப் படித்தேன். “வாங்கிய” என்ற சொற்பதம் என்னை உடனடியாக நிலைகுலையச் செய்தது, அது யாருடைய உடைமை என்பதுடன், அதன் ‘சட்டத்தன்மை’ குறித்தும் ஆச்சரியமடையவைத்தது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் இது இங்கிருந்து ‘பெற்றுக்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிடுவதே வழக்கமாகும். அவை முறையற்றதாகவும் பிரச்சினைக்குரியதாகவும் இருந்தாலும்கூட அவை அவ்வாறே குறிப்பிடப்படும். அது உண்மையைக் கண்டுகொள்வதற்கான இடத்தை விட்டுச் செல்கிறது. அது காலனித்துவ காலப்பகுதியில் மக்களுக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான உறவைப் புரிந்துகொள்வதற்காக அந்த மக்களையும் பொருட்களையும் இனங்காண்பதற்குமாக ‘பெற்றுக்கொள்ளப்பட்டது’ என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு நாம் கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறோம், வாங்கப்பட்டிருக்கிறோம், சட்டபூர்வமாக உடைமையாக்கப்பட்டிருக்கிறோம்.

நான் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவள் அருகில் நின்றேன். அந்தப் பெண்மணியும் அந்தச் சிறுவனும் எப்படி அச்சில் வார்த்தாற்போல் ஒரே அளவாக இருக்கிறார்கள் எனறு திகைப்புற்றேன் வெவ்வேறான நேரத்தில் இது எப்படி சாத்தியமானது என்று வினவிக்கொண்டேன். காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த பெயரிடப்படாத சிறுவன் இவளது மகனாக இருக்க வேண்டும். நான் அமைதியாக அமர்ந்து இதை எப்படி அவளுக்கு விபரிப்பது என்று முயற்சித்துக்கொண்டிருந்தேன். அவனை சிறுவயதிலேயே இழந்த அவனது பெற்றோர்கள் எவ்வளவு துன்பமடைந்திருப்பார்கள் என்பதையும் அன்றைய மரபுகளுக்கமைய அவனது உடலைப் பத்திரப்படுத்துவதற்கு அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்திருப்பார்கள் என்பதையும் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் அவர்கள் இன்று அவனைக் காண நேர்ந்தேல் அவர்களின் மன உணர்வுகள் எப்படியிருந்திக்கும் என்பதையும் விளக்க முயற்சித்தேன்.

அமெரிக்க பல்கலைக்கழகமொன்றின் குளிரூட்டப்பட்ட தொற்றுநீக்கப்பட்ட அறைகளில் நித்திய ஓய்வு கொண்டிருப்பவனின் நினைவைத் தொடரமுடியாமல் எழுகிறேன். காலனித்துவம் மற்றும் நம் கலாசாரத்தின் திருட்டு பற்றி அல்ல, எங்கள் மக்கள் எப்படி ஆவி பார்க்கிறார்கள், என் மகளுக்கு சொல்ல முயற்சித்தார்கள் என்பதை அறிந்து கொள்வதில் மட்டுமே நான் ஆறுதல் அடைந்தேன்- அந்த வயதில் கூட அவளுக்கு இதில் சில உண்மை தெரியும் – ஆனால் அதற்கு பதிலாக நான் என்ன செய்ய முயற்சித்தேன் எங்களுக்கு முன் இருந்த சிறுவன் உண்மையில் அவன் அல்ல, அவனுடைய முழுமையும் அல்ல என்பதை அவளுக்கு விளக்க வேண்டும்; அவர்கள் அவருடைய உடலை அதன் நோக்கம் கொண்ட இடத்திலிருந்து எடுத்துச் சென்றார்கள், ஆனால் அந்த இடத்திலிருந்து அவருடைய ஆவியைப் பிடிக்க முடியவில்லை, அது நீண்ட காலமாகப் போய்விட்டது. நீண்ட காலமாக விடுவிக்கப்பட்டிருந்தது. காலனித்துவத்தையும் எமது கலாசாரம் திருடப்பட்டுள்ளதைப் பற்றிக் கூறாமல் எமது மக்கள் மனவலிமையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதிலும் அதை எனது மகளிடம் தெரிவிப்பதிலுமே நான் நாட்டம் கொண்டிருந்தேன். அவள் இதில் பொதிந்திருந்த சில உண்மைகளை அந்த வயதிலேயே அவள் ஏற்கனவே அறிந்திருந்தாள். நான் அவளுக்குச் சொல்ல நினைத்ததெல்லாம் எமக்கு முன்னால் இருந்த அந்தப் பையனின் உடல் உண்மையில் அவனுடையது இல்லை என்பதையும் அவனது முழுமையான உடல் அதுவல்ல என்பதையுமே. இருப்பினும், அவர்கள் அவனது உடலை அதற்கென்று குறித்தொதுக்கப்பட்ட இடத்திலிருந்து எடுத்துச் சென்ற போதிலும் அவன் மரணித்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த இடத்திலிருந்து அவனது உணர்வை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை, அது விடுதலை அடைந்து நீண்டகாலமாகிவிட்டது.

நாம் அந்தப் பேழையின் முன் சற்று நேரம் நின்றிருந்தாம்; அவள் அதனை ஆர்வம் மேலிட உற்றுநோக்கினாள், அதில் ஏதோ பெரிய தவறிருக்கிறது என்று நான் மௌனமாக சிந்தித்துக்கொண்டிருந்தேன், பேழைகளில் வைக்கப்படும் உடல்களின் இயல்பு நிலையில் ஏதோ பாரிய தவறு இருப்பதாகவும் அதில் ஒரு உண்மை தவறியிருப்பதாக எண்ணியதுடன் அவளுக்குப் போதிக்கவும் முற்பட்டேன். அந்த அனுபவத்தில் ஒரு அடிப்படை நேர்மையின்மை இருந்தது அது என்னை எனது குழந்தைகளுக்காக வேறு உலகத்தைப் பார்ப்பதற்கு உந்தித்தள்ளியது. எம்மிடம் மாற்றுவழிகள் என்ன இருந்திருக்கும் என்று வியக்க ஆரம்பித்தேன். எம்மால் வரலாற்றைத் தலைகீழாகத் திருப்ப முடியாது ஆனால் அதனை எம்மால் எதிர்கொள்ள முடியும் என்பது கடவுளுக்குத் தெரியும். அந்த நொடியில் அந்தப் பையனைப் போன்ற உடல் எப்படி உணர்ந்திருக்கும் என்று நான் சிந்தித்தேன்,  அவனது உண்மையான உடலை ஏற்க மறுத்திருக்குமா? நாம் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ள இந்த விளக்கங்களை மாற்றியமைத்திருந்தால் அருங்காட்சியகத்தைப் பார்வையிட வருபவர்களின் முழு அனுபவமும் எப்படி மாறியிருக்கும்? அதன் முழுமையான நிலையில் நாம் அந்தக் கதையைச் சொல்லியிருந்தால் எத்தகைய மாற்றம் நிகழ்ந்திருக்கும்? அருங்காட்சியகத்திற்குச் செல்பவர் வலியையும் வரலாற்றின் உண்மையையும் உணர்ந்திருப்பாரா? காட்சிப் பொருட்கள் வெறுமனே காட்சிப்பொருட்களாக இல்லாமல் ஒரு அனுபவமாக இருந்திருந்தால், அதனை ஒரு அறைகூவலாக, ஒரு குறிப்பாக எடுத்துக்கொண்டிருப்பார்களா? நாம் நேர்மையாக கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் தொடர்பு படுத்தயிருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒவ்வொரு பார்வையாளரும் உண்மைக்கு முகங்கொடுத்தால் என்ன நிகழ்ந்திருக்கும்?

நான் எனது மகளை என்கைக்குள் வைத்து பிடித்தபடி சிந்தனையில் ழுழ்கியவனாக நீண்டநேரம் அசையாமல் நின்றேன். அந்த நேரம் முழுவதும் சிறுவர்கள் அதையும் இதையும் கண்ணுற்று அவர்களுக்கு விளக்கும் தகுதியற்ற போதிலும் தமக்குத் தெரிந்ததையும் தெரியாததையும் சொல்லிக் கொண்டே நடந்து திரிந்தனர். அந்த உடலையும் அந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஏனைய பொருட்களைப் பேன்றே பார்த்தனர். அது ஒரு காலத்தில் முழுமையான உயிருடன் நன்கு மூச்சுவிட்டுத் திரிந்த குழந்தையாக ஒருபோதும் இருந்ததில்லை என்ற உணர்வே அவர்களிடம் இருந்தது. நாம் எவ்வளவு இலகுவாக சூழ்நிலைகளுக்கு ஏற்ப எமது நினைவிற்கு உருவம் கொடுத்து விடுகிறோம். அவனுடைய குடும்பத்தினர் அவன் மீளாத்துயிலில் ஆழ்ந்தபோது அவனுக்காக அஞ்சலி செலுத்தாதவர்கள் போலும் பிரார்த்தனை செய்யாதவர்கள் போலும், அவனது கல்லறை திருடர்களால் களவாடப்படாததுபோலவும், அவன் அவனது நாட்டிலிருந்து திருடப்படாதவன் போலவும் பார்த்துக்கொண்டிருந்தனர். இத்தனை வருடங்களுக்குப் பின்னரும், நாம் உன்னையும் உனது வாழ்வையும் உரிமை கொண்டாடுகிறோம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. இதனை ஒரு வினோதம் என்று யாராவது கருதினால் அவர்கள்தான் வினோதமானவர்கள், ஏனெனில் உலகைப் பார்ப்பதற்கு ஒரே ஒருவழி மட்டுமே இருக்கிறது. இறுதியில் “மனித வாழ்க்கைக்கு மதிப்பளிக்காத மக்களை நம்புவது கடினம்” என்பதை மட்டுமே என்னால் நினைத்துப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

நாம் இத்தருணத்தில் இங்கு இருக்கிறோம், இனம், வரலாறு மற்றும் அந்த உடல், நமது உடல்கள் ஆகியவை தொடர்ச்சியாக நாம் செய்யும் அனைத்து விடயங்களுடனும் தொடர்பு பட்டுள்ளது. நாம் அனைவரும் நம் உடலுக்கு முழு பாதுகாப்பையும் ஆறுதலையும் காண்பதற்கான ஒரே வழி நம் மனதை உடலிலிருந்து பிரிப்பது, நம் ஆவியை உடலிலிருந்து பிரிப்பது, நம் வரலாற்றை நம் உடலிலிருந்து பிரிப்பது என்று கற்பித்த இடத்தில் நாம் இந்த நொடிப்பொழுதில் இங்கிருக்கிறோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். ஒரு பேச்சுக்காக நான் ஏற்றுக்கொள்கிறேன். கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருப்பது என்னுடைய மகனின் உடல் இல்லை என்பதை நான் ஏற்கிறேன், ஏனெனில் உண்மையிலேயே அவன் என் மகன் இல்லை. அனைத்து மதநம்பிக்கையாளர்களுக்கும் நான் சொல்வதெல்லாம் அனைத்து பாடலும், அனைத்து நம்பிக்கையும், அனைத்து உழைப்பும், அனைத்து பிரார்த்தனையும் உச்சத்தை அடைந்து, அதுவே இந்த கலாச்சாரத்தின் எச்ச சொச்சங்களாக வடிவம் பெற்று நமக்கு முன்னால் நிற்கிறது அது ஒரு தொலைதூர விஷயம், ஒரு பழமையான விஷயம், எமக்குச் சொந்தமில்லாத நேரத்திற்கான ஒரு விஷயம்.

இறுதியில் “மனித வாழ்க்கைக்கு மதிப்பளிக்காத மக்களை நம்புவது கடினம்” என்பதை மட்டுமே என்னால் நினைத்துப் பார்க்கக்கூடியதாக இருந்தது.

ப்ரொவிடன்ஸ், றோடி ஐலேண்ட்

 

00000000000000000000000000000000000000000

மாத்யு ஷெனோடா பற்றிய குறிப்பு:

தேசிகன் ராஜகோபாலன்மாத்யு ஷெனோடா பல்வேறு கவிதைத் தொகுப்புகளை எழுதிய எழுத்தாளர் என்பதுடன் அதனைத் தொகுத்துமிருப்பவர். மேலும் ஆப்பிரிக்க கவிதைப் புத்தக நிதியுதவிக்கான படைப்பாளிகளை இனங்காண்பவருமாவார். அவர் தற்போது சமூக சமத்துவம் மற்றும் உள்ளீர்ப்புக்கான இணை ஊக்குவிப்பாளராகவும், ரோட் ஐலேண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் இலக்கிய கலை பேராசிரியராகவும் கடமையாற்றுகிறார்.

00000000000000000000000000000000000000000

தமிழில் : தேசிகன் ராஜகோபாலன்-இலங்கை

தேசிகன் ராஜகோபாலன்

(Visited 79 times, 1 visits today)