கவிஞர் மற்றும் சமூகப்போராளி சுகதாகுமாரிக்கு அஞ்சலி!-கேரள கவி அச்சுதானந்தன்-தமிழில் ஆலா

ஆலாஇயல்பாகவே  சில சமயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தன. நான் அவரிடமே சொல்லியுள்ளேன் சிலபோது பொதுவெளியில் வெளிப்படுத்தியுள்ளேன். ஆரம்ப நாட்களில், வைலோபிள்ளியைப் போலவே, அவசரகாலத்தின் ஜனநாயக விரோத தன்மையை ள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் பின்னர் தவறை உணர்ந்து கவிதை மூலம் அதை சரிசெய்தார்கள்,. மிக சமீபத்தில் வலது அரசியல் அவரை  சொந்தம் கொண்டாட முயற்சித்தது. பின்னர், ஒரு நேர்காணலில், தன்னை ஒரு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பெண் எதிர்ப்பு என்று அழைத்தவர்களுக்கு எதிராக அவர் பதிலளித்தார்

சச்சிதானந்தன் : சுகதகுமாரியின் பல கவிதைகளை வார மாத இதழ்களில் வாசித்திருந்தாலும்  எனது பதினைந்தாவது வயதில் தான், சுகதகுமாரியின் முத்துச்சிப்பிகள் என்ற கவிதைத் தொகுப்பைப் முதலில் படித்தேன். அப்போது நான்  பத்தாம் வகுப்பு மாணவர். பள்ளி இதழ்கள் மற்றும் கிராமப்புற கையெழுத்துப் பிரதிகளில் மட்டுமே கவிதை எழுதும் காலம். இருப்பினும்  மத்ருபூமி வார இதழின் தீவிர  வாசகன். அதில் தான் சுகதகுமாரியின் முதன்மைக்கால கவிதைகள் பல வாசிக்கக் கிடைத்தது.  ஒரு சிறிய கலைஇதயவும் மற்றும் கவிதை அனுபவமுள்ள  ஒரு பள்ளி மாணவருக்கு புரிந்து கொள்ளக்  கூடிய வெளிப்படையான கவிதைகளாக இருந்தது அது.  அவருடைய கவிதைகள்  அறிவுப்புலனை தூண்டியதை விட  இதயத்தோடு பேசினவை.  பிற்பாடு  அவருடைய  கவிதைகள் வாசிப்பது என்  வழக்கமாக மாறினது.

வைலோபிள்ளி, இடச்சேரி, அக்கித்தம், ஒளப்பமண்ணா, என்.வி. கிருஷ்ணாவரியர், விஷ்ணு நாராயண் நம்பூதிரி, ஓ.என்.வி மற்றும் சுகதகுமாரி போன்றவர்கள் தான்  அந்தக் காலத்தைய  கவிஞர்களாக அறியப்பட்டிருந்தவர்கள்.  பிற்பாடு அய்யப்ப பணிக்கர், என்.என். கக்காடு, மாதவன் அய்யபத்து, செரியன் கெ. செரியன் போன்றோரும் கவிஞர்களாக அறிமுகமானார்கள். நவீன கவிதைகளின் ஆரம்ப நாட்களிலும் சுகதகுமாரி  கவிதைகளை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.  நிஷகந்தி, இருள் சிறகுகள், இரவு மழை, ஐ லவ் யூ, கொலோசஸ், ஏனென்றால் இவ்வளவு ஐ லவ் யூ, ராஜலட்சுமிக்கு, மிட்நைட் மலர்கள், தர்மத்தின் நிறம் கருப்பு, பெண் ’90, ஜெஸ்ஸி, அம்பலமணி, குறிஞ்சி மலர்கள், தலச்சேரி, பாத அர்ப்பணிப்பு , கடலைப் பார்க்கச் சென்றவர்கள், சியாமமுரளி, 21 ஆம் நூற்றாண்டினிடம், மற்றும் சமீப காலம்  தன் தோழனைப்பற்றி எழுதின  கவிதைகள் என் மனதில் இளைமையாய் பதிந்துள்ளது.

கொஞ்சம் பக்குவப்பட்ட  வயதிலிருந்தே நாங்கள் பல கவிதை மாநாடுகளில் ஒன்றாக கலந்துகொள்ள ஆரம்பித்தோம். வயதான வேளையில், ​​அவர்கள் என்னை தன் சொந்த சகோதரராக ஏற்றுக்கொண்டார்கள். ‘ இனி இந்த மனதில் கவிதை இல்லை’ என்ற அவரது கவிதைக்கு பதிலளிக்கும் விதமாக ‘ நான் சுகதகுமாரியுடன் ‘ என்ற கவிதை எழுதினேன்.

”கைகளை பிடித்துக் கொள்ளுங்கள் சகோதரி, சகோதரி,
அன்னாச்சிப்பழம்  பூத்த வரம்பில் வழுக்குமே என்று துவங்கி
இருள் போகிறது சகோதரி, சகோதரி,
இரத்தமென்பதால் வரப்பு  வழுக்குமே”

என்று முடிவடையும் கவிதை எங்களுடைய  சகோதரத்துவத்தை பலப்படுத்தியது என்று கூறலாம்.

பின்னர் நான் திருவனந்தபுரத்திற்குச் செல்லும்போது, ​​அவரை ‘வரத'(சுகதகுமாரி வீடு)யில் தவறாமல் சந்திப்பது வழக்கமானது. ஒரு முறை அவர்கள் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் குணமடைந்து கொண்டிருந்தார். சில கவிதைகளைப் வாசித்து காட்டும்படி  கேட்டதும், கையில் இருந்த சிலவற்றைப் படித்து காட்டினதும் எனக்கு நினைவிருக்கிறது.

அவர்கள் நடத்திய சுற்றுச்சூழல் போராட்டங்களில் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டிருந்தேன். ‘என்டே’ பஹுரூபி’ என்ற என்னுடைய  கவிதைத் தொகுப்பை திருவனந்தபுரத்தில் வைத்து வெளியிட்டு தந்துள்ளார். அவர் ‘சரஸ்வதி சம்மான்’ விருது பெற்றபோது, ​​தூரதர்ஷன் தொலைக்காட்சிக்காக அவரை பேட்டி கண்டிருந்தேன்.   ஆறண்முளா விமான நிலையத்திற்கு எதிரான துபாயில் நடந்த ஒரு மாநாட்டில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டோம். இறுதியாக என் மனைவி பிந்துவுடன் சென்றபோது, ​​சுஜாதா தேவியின் பிரிவில் அவர் மனம் உடைந்து இருந்தார். அதற்கு முன்பு, இருதயகுமாரியும், சுகதகுமாரியில்  கணவரும் இறந்து விட்டிருந்தனர்.  மகளை போன்று தன்னுடன் வசித்து வந்த தங்கையின் மரணம் அவரைப்பொறுத்த வரை சகித்துக்கொள்ள இயலாத துயரில் வீழ்ந்து  இருந்தார்..

ஆலாசுகதகுமாரியின் தார்மீக வாழ்க்கையை வழிநடத்தியிருந்தது காந்திய விழுமியங்களாக இருந்தது.  அது அவரது தந்தை போதேஸ்வரன் மூலமாக பெற்று இருக்கலாம்.  தியாகம் என்பது அறிவுசார் மொழியில் ‘கைவிடுதல்’ – அவருடைய பிடித்த குணமாக இருந்தது.  அதனால் முதுகலைப்பட்டத்தில்  முதலாம் தரவரிசையில் வெற்றி பெற்றார் என்பதால் பல்கலைக்கழக கல்லூரியில் கற்பிக்க அழைக்கப்பட்டிருந்தாலும், சிறு குழந்தைகளுக்கு கற்பிக்கும் பாலர் பள்ளி ஆசிரியைப்பணியை  தேர்ந்தெடுத்திருந்தார். இரக்க குணவும் சேர்ந்ததுடன்  ஆரம்பகால சுயபட்சாதாப கவிதைகளை புறம்தள்ளி  விட்டு  தியாகத்தில் நிரம்பிய அன்பில்  இயற்கையை நோக்கியும் தன் கவிதைகளை  பாய்தார்….. இந்த இயற்கையின் நேசத்திலிருந்து வந்தது தான் அவருடைய  சுற்றுச்சூழல் போராட்டங்களில் இருந்த  ஆற்றல்.  அவருடைய சைலண்ட் வாலி போராட்டம் வழியாக தன்னுடைய  வலுவை  நிரூபித்தார்.

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், ’விஞ்சான  சாகித்ய பரிஷத்’ போன்ற அமைப்புகளின் ஆதரவு கிடைத்தவுடன் போராட்டம் சனங்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் நேரடி தலையீடு போராட்டம் இறுதியில் வெற்றிபெற உதவியது. பிற்காலத்தில் பல வன பாதுகாப்பு போராட்டங்கள், ஆதிவாசிகளிடையே உள்ள செயல்பாடுகள், அனாதைப் பெண்களுக்கும்  மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  வேண்டியுள்ள தங்குமிடம் உருவாக்கி கவிதையிலிருந்த மனச்சோர்வை தன்னுடைய மனிதநேய செயல்பாட்டால் எதிர்கொண்டார்.

இயல்பாகவே சில சமயங்களில் அவருடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதை நான் அவரிடமே நேரில் கூறியுள்ளேன்  அதே போன்று அதை பொதுவெளியிலும்  வெளிப்படுத்தியுள்ளேன். ஆரம்ப நாட்களில், வைலோபிள்ளியைப் போலவே, தன்னுடைய அவசரகாலத்தின்  ஜனநாயக விரோத தன்மையை அவர் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் பின்னர் தங்கள் தவறை உணர்ந்து அதை சரிசெய்து தங்கள் கவிதைகள்  மூலமாகவே  வெளிப்படுத்தியுள்ளனர்.  மிக சமீபத்தில் ’ஸ்வயம் சேவகர்கள்’ ஆறண்முளா கிளர்ச்சியை ஆதரிப்பது போல் காட்டிக்கொண்டு  சுகதகுமாரியை தங்கள் இயங்களுக்கு   சொந்தமாக்க முயன்றனர்.. இது என்னைப் போன்ற நிறைய பேரை வருத்ததிற்கு உள்ளாக்கினது..

லீலா மேனனின் தாயகத்திற்கு கொடுத்த சுகதகுமாரி கொடுத்த நேர்காணல் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.  பின்னர், சுகதகுமாரியை பார்க்கச் சென்றபோது, ​​அவருடைய  உரையாடலில் இருந்து என்னிடம் ஒரு ஒவ்வாமை இருப்பதாக தெளிவாகத் தெரிந்தது. சுகதகுமாரி தான் லீலா மேனோனுக்கு  நேர்காணல்  கொடுக்கவில்லை என்றும், லீலா மேனன் தன்னை பார்க்க விரும்புவதாகக்கூறி சந்தித்து உரையாடிய கருத்துக்களை அதில் சில சேர்த்தல்களுடன் ஒரு நேர்காணலாகக் வெளியிட்டதாகவும் விளக்கினார். பின்னர், ஒரு நேர்காணலில், தன்னை ஒரு ஆர்எஸ்எஸ் ஆர்வலர் மற்றும் பெண் எதிர்ப்பு என்று அழைத்தவர்களுக்கு எதிராக பதிலும் அளித்திருந்தார்

எப்படியிருந்தாலும், இப்போது நமக்கு முன்னால் இருப்பது அவரின் கவிதைகள் தான். நிச்சயமாக, அவருடைய கவிதைகள் வரும் தலைமுறைகளுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும். மேலும் மனிதகுலத்தின்  தற்கொலைக்கான  நடவடிக்கைக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த எச்சரிக்கையாகவும் இது நிலைகொள்ளும்.   வெள்ளம், தொற்றுநோய்கள், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் மூலம் இயற்கை நமக்கு துன்ப செய்திகளை அனுப்பும் காலம் இது. மனிதன் தன் சொந்த லாபத்திற்காக இயற்கையை சுரண்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் அமைப்பில் விரிசல் விழக்கூடாது என்றும், மனிதன் உலகத்தின் அதிபதி அல்ல என்றும் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு சொந்தமானதே  பூமி என்றும், மனித வரலாறு என்பது பிரபஞ்ச வரலாற்றில் ஒரு சிறிய சொல் மட்டுமே என்றும் இயற்கை நம்மோடு உரைக்கிறது. இந்த இன நெருக்கடி போதிலும்கூட, நம்முடைய அன்பான கவிஞர் சுகதகுமாரி தொடர்ந்து என்ன சொல்கிறார் என்பதை நாம் தீவிரமாக எடுத்துக்கொண்டு, ‘வளர்ச்சி’ என்ற நமது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் .

மூலம் : https://truecopythink.media

மலையாளத்தில் : அச்சுதானந்தன்

ஆலா

 

தமிழில் : ஆலா

ஆலா -இந்தியா

(Visited 52 times, 1 visits today)