பெண் ஆளுமை-கட்டுரை-பவானி தம்பிராஜா

படித்து வாங்கிய பட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஒ௫வரது தொழில்நுட்பம், கைவினைகள், கலை, பேச்சு, மொழி, விளையாட்டு முதலான திறமைகளும் முக்கியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். இந்தத் திறமைகளுக்கு அப்பால் இன்னொரு வார்த்தையும் நம் காதுகளில் அடிக்கடி விழும். ஆளுமை என்ற சொல்தான் அது.

பவானி தம்பிராஜாஉளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.

ஆளுமை என்பது நாம் யார் என்பதைப் பற்றிய சொல். தனித் திறமைகள் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக நம்மை அடையாளப்படுத்தக்கூடிய அம்சம். படிப்பும் பல்வகைத் திறன்களும் உள்ள ஒருவர் சிறந்த ஆளுமையாக விளங்குவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த ஆளுமைத் திறன்தான் சாதாரண மனிதர்களையும் தலைவர்களையும் பிரிக்கிறது. சாமானிய நபர்களையும் சமூகத்தையே மாற்றக்கூடிய வலிமை படைத்தவர்களையும் வேறுபடுத்துகிறது.

அன்றாட வாழ்வில் நாம் பல்வேறு சூழல்களை எதிர்கொள்கிறோம். அதில் எதிர்பாராத சூழல் எழும்போது அதை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரது ஆளுமைத் திறனைப் புரிந்துகொள்ளலாம்.

சமுகத்தின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் இருபாலாரினதும் இணையற்ற உழைப்பும் அறிவு பரிமாணங்களும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றது. பெண் ஆளுமைகள் உயர்வாக கருதாத சமுகத்தில் உயர்வு ஆண் சார்ந்ததகவும் ஆணை மையப்படுத்தியதாகவும் தொடர்ச்சியாக இருப்பதும் அங்குள்ள நடைமுறைகள் அனைத்தும் ஆண் ஆளுமைக்குரியனவாக மேலும் மேலும் கட்டமைக்கப்படுவது இயல்பானதாகும். ஆண் ஆளுமைகள் எடுத்துக்காட்டுகளாகவும் எடுகோள்களாகவும் உயர்ந்த உதாரணங்களாகவும் சரித்திரங்களாகவும் பதியப்பட்டிருப்பதும் அதே விதமான பெண் ஆளுமைகள் காணாமல் போயிருப்பதும் அவற்றை தரிசிக்க நூல்களை தேடி தேடி வசனங்களில் வாழ்க்கையை தேடுவதும் வழக்கமாகிவிட்டது. அதற்கான காரணம் என்ன? பெண் ஆளுமைகள் உலக வளர்ச்சியிலும் வரலாற்றிலும் மனித வர்க்கத்தை கூர்மைப்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்யவில்லையா? சரித்திரங்களும் சமயங்களும் விஸ்தரித்துக் காட்டியது போல் பெண் பலவீனமான பாண்டம் என்பதாலா? ஆண்மீக திடம் அமைக்கப்பட்டதும் ராட்சியங்கள் கவிழ்க்கப்பட்டதும் பெண் என்கின்ற பிரமையினாலா? இது சிந்திக்கவேண்டிய அறிவியலாக காணப்படுகின்றது.

எனவே உயரிய சமூக விடுதலை மனித குல விடுதலை பற்றிய சார்ந்த யதார்த்தவாதத்தினை பேச வேண்டிய தீட்சண;;;;யமான பார்வைகளும் தூர நோக்குகளுமே சமூக அமைப்பியலை மாற்றக்கூடியனவாகவும் மறுமலர்ச்சி கொண்டதாகவும் ஜனநாயக பண்பை தன்மைகளை ஒரு முகப்படுத்துவனவாகவும் காணப்படுகின்றன.

எனவே தூர நோக்கை பெற்றிருப்பதும் தீட்சன்யத்தை தரிசிப்பதும் பெண் ஆளுமை விஸ்தரிப்பில் அவசியமானவைகளாகும். அவற்றுக்கு போராட வேண்டிய தேவைப்பாடு உலகை வென்றுதர புறப்பட்டுள்ள பலரின் நம்பிக்கையாகவும் நடைமுறையாகவும் காணப்படுகின்றது. பெண் ஆளுமைகள் வெல்லப்படுவதற்கும் பேசப்படுவதற்கும் அவற்றின் எழுச்சிகள் கூர்மைப்படல் வேண்டும். ஆணுக்கு எதிரானதாக மட்டுப்படுத்தாமல் இருப்பதும் செயற்பாட்டு திறனாகும் பெண் ஆளுமைகள் எழுச்சியுற முடியாமைக்கும் வெளிப்படுத்துவதற்கும் சமுக அரசியல் பொருளாதார காரணிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றமை வெளிப்படையாக கூறமுடியும்.

சமுக கட்டமைப்புகளின் மாற்றம் என்பது பெண் ஆளுமைகள் எழுச்சியுறுவதிலும் தங்கியுள்ளது. சமுக கட்டமைப்பு பெண் சம்பந்தமான பதிவுகள் உயர்வாக இல்லாத ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவிப் பார்க்க வேண்டிய தேவைப்பாடு அதிகமாக காணப்படுகின்றது. கலை, கலாச்சார, பண்பாடு, உணவு முறைகள், குடும்ப அமைப்புக்கள, திருமணம், பாலியல், பொறுப்புக்கள் உடை சார்ந்த துணிவுகள;;;;,; உளம் சார்ந்த தெளிவு, ஒழுக்கம், தான் என்கின்ற சுயம், இயலும் என்கின்ற திடம் என்பவற்றின் வெளிப்பாடுகள் பெண் ஆளுமைகளை உயர்த்துவனவாகும். அதனை பெண் வர்க்கம் கையிலெடுக்கும் போது ஆண்கள் பக்கபலமாக அதன் பலவீனம் பற்றிய உணர்வுகளை ஏற்றுக்கொள்வது யதார்த்தமாக இருக்கின்றது.

பெண் அரசியலில் தன் ஆளுமைகளை விஸ்தரிப்பதற்கு அவளின் அரசியல் ஞானமும் அனுபவமும் அறிவும் ஆழ்ந்த சிந்தனையாகின்றது. அரசியல் கொள்கை கோட்பாடுகள் யாவும் மனித குல விருத்திக்கு மேம்படுத்தக் கூடியனவாகவும் அவற்றை சரியான அறிவு சார்ந்த சமூக அமைப்புகளுக்குள் தத்துவார்த்த ரீதியான சிந்தனைக்குள் சரியான தூர நோக்கு கொண்டதாக அமைத்துக் கொள்வது அவசியமாகும். அரசியல் என்பது அனுதினம் பேசப்படும் மிக முக்கியமான பொருள் என்பதனை எளிமையோடு உணர்ந்துகொள்வதும் அவசியமாகின்றது. அது சார்ந்து பேசப்படும் பொழுது பழமைகால போக்கை வெறுப்பதும், எதிர்ப்பதும் அவசியமாகின்றது. புதுமை சிந்தனைகள் புரட்சி மாற்ற கருத்துக்கள் மாற்றம் என்பவற்றை தனக்குள்ள ஆளுமைகளால் அசைக்க செய்தல் அவசியமாகும். எதிர்த்தல் என்பதனை வெளிப்படுத்தல் என்பதனையும் துணிவோடு செயற்படுத்தும் ஆளுமைத்திறன் அவசியமாக கருதப்படுகின்றது.|

பெண் தன் ஆளுமைகளை; கூர்மைப்படுத்துவதிலும் வெளிப்படுத்துவதும் நிலைக்கச் செய்வதும் அது சம்பந்தமாக உலகம் பேச வைப்பதும் முதலாவது பெண்சார்ந்த செயற்பாடாக கருத்தில் கொள்ளவேண்டும். ஆனாலும் அது பெண்சார்ந்தது மட்டுமல்ல என்பதனையும் சமுகம் – ஆண்கள் சார்ந்த தேவையாக கருதுதல் தொடர் தேர்ச்சியான வெற்றிக்கும் விடுதலைக்கும் வித்திடச் செய்யும். ஒரு பெண் சமூக அரசியல் பொருளாதார அந்தஸ்த்து கடந்து தனக்கேற்பட்ட தன் சார்ந்தவர்களும் ஏற்பட்ட கொடுமைகளை அச்சமின்றி பயமின்றி கூறத்தொடங்கும் பொழுது அச்சமூகத்தின் விருத்திக்கு முதலாவது வெற்றி கேடயம் கொடுக்கப்படுகின்றது. ஒரு சமூக பார்வையில் பொறுக்க முடியாத தனிமனித சுதந்திரத்தினையும் தன்மானத்தினையும்; பாதிக்கக் கூடிய எச்செயலானாலும் அது வெகுவாக பேசப்படவேண்டிய பொருளாகின்றது. எனவே அது உலகம் விழித்துக் கொள்ளும் வரையும் உரத்துக் கூறப்படவேண்டிய இலக்குள்ள செயலாக கருதப்படவேண்டும்.

பெண் ஆளுமைகளை ஸ்திரப்படுத்துவது என்பது ஆண் சார்ந்த ஆளுமைகள் வீழ்த்துவது அல்ல அல்லது ஆணுக்கெதிரான ஆளுமைப் பரிமாணங்களை ஸ்திரப்படுத்துவதல்ல. பெண் தனக்குள்ள உச்சிமுதல் உள்ளங்கால் வரையான அனைத்து அம்சங்களும் வாழ்வியலிலும்; பெற்றிருக்கும் தடைகளை அறிவு பூர்வமாக உடைத்து எறிந்து தனக்குள் சரியான முற்போக்கு தனமான அறிவு சார்ந்த கூர்மையான ஆளுமைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும். தனக்கிருக்கும் இயல்பான சூழலுக்கும் தான் சார்ந்த சமூக நிலைக்கேற்ப பெண் தன் ஆளுமையை நெறிப்படுத்தி கொள்வதென்பது முக்கியமாகின்றது. மிக விரைவாக ஆக்கப்படும் பெண் ஆளுமைக்காரணிகள் மிக விரைவாக  காணாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது தனக்கு பொருத்தமில்லாத ஆளுமை உணர்வுகளை உணர்ச்சிபூர்வமாக தனக்குள் அப்பிக்கொள்வதும் ஆபத்தானதே, எனவே பெண் ஆளுமைகளை மிக சிறந்த முறையில் வடிவமைத்துக்கொள்வதற்கான அறிவுபூர்மான சிந்தனைகளும் உயிரியல் வலிமையும் கட்டமைப்புக்களை துண்டாடும் உடைப்புக்கள் தான் என்பதனை தனியாக உணரும் தற்துணிவு, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத உறுதி, நேர்மை, ஒழுக்கம், முடிவெடுக்கும் திறன், போராடும் நம்பிக்கை, எதிர்கால திடம் இவை எல்லாப் பெண்ணுக்கும் எப்போது மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டு முழுமைபெறுகின்றதோ அது பெண் ஆளுமைகளை வென்றெடுக்கும் காலமாகின்றது. பெண்கள் தினக் கொண்டாட்டம் என்பது இவற்றை அறிவு பூர்வமாய் கட்டி எழுப்பும் பணியின் காத்திரமான பங்களிப்பாகும். இதனை வென்றெடுக்க தேவ தூதர்களும் தேவதைகளும் இறை அரசர்களும் அவதாரங்களும் வரமாட்டார்கள்; பெண்கள் தம் குரல் உயர்த்தி உயிர் வலிமை உள்ளவரை போராடி வெற்றிக்கொள்வதே உலகத்தின் வர்க்க கட்டமைப்பின் வரலாற்று பதிவாக காணப்படுகின்றது. எனவே பெண் ஆளுமைகள் ஸ்திரம்பெற ஐக்கியப்பட்டு போராடுவோம்.

பவானி தம்பிராஜா-நெதர்லாந்து

பவானி தம்பிராஜா

(Visited 42 times, 1 visits today)