நட்சத்திரங்களை சிரிக்கவைத்தல்-கவிதை-றியாஸ் குரானா

நட்சத்திரங்களை சிரிக்கவைத்தல்

றியாஸ் குரானா

என்ன செய்கிறாய்
நட்சத்திரங்களை
சிரிக்கவைக்க முயற்சிக்கிறேன்
அப்போ அங்கு இரவா
இல்லை
அப்போ எப்படி
பகல் முழுக்க உறங்கி
இரவில் விழித்திருப்பதாகும்
நட்சத்திரம் வராவிட்டால்
விடிய விடிய
இருட்டை துரத்துவேன்
ஏன் இருட்டு பிடிக்காதா
பிடிக்கும்
அப்ப ஏன் துரத்த வேணும்
அது ஒரு விளையாட்டு
இரவைத் துரத்தும்போது
அது ஓடத்தொடங்கும்
ஓட ஓட இருள் ஒழுகியபடியே இருக்கும்
இருள் முடிந்ததும்
நீங்கள் காலைப்பொழுது என்பீர்கள்.
நான் துரத்தி விளையாடுவதாலே
அது நிகழுகிறது.
அந்த விளையாட்டில் இழந்த சக்தியை
இலக்கியத்தை சாப்பிட்டே
சரிசெய்கிறேன்.
சும்மா குறட்டை விட்டு துாங்கவும்
விடிந்தால், பல்துலக்கி
காலைக்கடனை முடிக்கவும்
இலகுபடுத்துவதற்காகவே.
இரவை துரத்த மறக்கும் ஒரு நாளை
விரைவில் எழுதுவேன்
எழுதுவதைவிட, நட்சத்திரங்களை
சிரிக்க வைப்பது இலகு.

றியாஸ் குரானா -இலங்கை 

 

 

றியாஸ் குரானா

(Visited 64 times, 1 visits today)