அந்தக் கவிதை நான்!-மொழிபெயர்புக் கவிதை-ரூபன் சிவராசா

அந்தக் கவிதை நான்!

ரூபன் சிவராசா

 

எவராலும் எழுதப்படாத
கவிதை நான்
எப்பொழுதும் எரியூட்டப்படும்
கடிதம் நான்
ஒருவரினதும் பாதம் படாத
பாதை நான்
மெட்டமைக்கப்படாத
பாடல் நான்
பேச மறுக்கப்பட்ட
உதடுகளின் வேண்டுதல் நான்
பிறக்காத பெண்ணின்
புதல்வன் நான்
எந்தக் கையும் மீட்டாத
வீணையின் நரம்பு
ஒருபோதும் மூட்டப்படாத
சுவாலை
என்னை விழிப்புறச் செய்யுங்கள்
மண்ணிலிருந்தும் மலையிலிருந்தும்
உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும்
என்னை விடுவியுங்கள்
எனது வேண்டுகை
எவராலும் செவிமடுக்கப்படவில்லை
ஒருபோதும் நிகழாதவற்றின்
நிகழ்வுகள் நான்.

Inger Hagerup-(1900-1975)

0000000000000000000000000000000

விதை

ரூபன் சிவராசா

ஒரு துண்டு நிலத்தில்
நான் கிடக்கிறேன்
வளர்கிறேன்
நீரை உறிஞ்சி மண்ணை உண்கிறேன்
வெம்மையும் இருளும்
குளுமையும் கூடிக்கிடக்கிறதிங்கு
அமைதியும் இன்பமும்
கூடவே விரவிக்கிடக்கிறது
மெல்லக் கால் தொட்டு நனைத்தது
இரவு பெய்த மழை!
என் சொல் கேளெனக்
காதில் கிசுகிசுத்தது
கால் நனைத்த அந்த மழை:
கூரையை உன்னால் உயரத்த முடியும்போது
நிகழும் சின்னம்சிறு உடைப்பில்
உலகின் கதவுகள் விரிந்து திறக்கும்
சூரியனும் உன்னருகே இறங்கிச் சிரிக்கும்

இங்கர் ஹாகரூப்

தமிழில் : ரூபன் சிவராசாநோர்வே

ரூபன் சிவராசா

00000000000000000000000000000

கவிஞர் பற்றிய குறிப்பு:-

ரூபன் சிவராசா இங்கர் ஹாகரூப்(1900-1975):

நோர்வே நாட்டின் ‘பேர்கன்’ நகரில் 1904 ஆம் ஆண்டு பிறந்த இன்ஜெர்  ஹல்சொர் ஆசிரியையாகவும் சிறுவர் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும்  தன்னை இனம்காட்டிக்கொண்டார். தனது 5 ஆவது வயதிலேயே தந்தையைப்பறி  கொடுத்த இன்ஜெர்  ஹல்சொர் 1931 ஆம் ஆண்டிலே பிரபல்யமான எழுத்தாளரான அண்டர்ஸ் அஸ்க்வொல்ட்  ஹக்ருப் -ஐத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஓர் கலஸ் ஹக்ருப் என்ற பெயரில் ஓர் மகனும், ஹேல்க் ஹக்ருப் என்ற  மகளும் இருந்தனர் .நொஸ்க் மொழியின் தலைசிறந்த கவிதாயினியாக போற்றப்படும் இவரின் கவிதைகள் மானிட நேயத்தையும் போரின் அவலங்களையும் இயற்கையை நேசிக்கின்ற படிமங்களையும் தன்னகத்தே கொண்டவை.

இவர் தனது இளமைக்காலத்தில் கம்யூனிச அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.1943 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப் போரின் பொழுது ஸ்கண்டிநேவியன் நாடுகள் மீது படையெடுத்த ஜெர்மன் நாசிகள் செய்த அட்டுழியங்களை தனது கவிதைகளால் மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தினார்.அதில் குறிப்பாக  “Aust Vågøy”– ”அஉஸ்த் வோக்கொய் ” என்ற கவிதை உலகப்புகழ் பெற்றதாகும் இந்தக்கவிதை 1943 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இவரால் இயற்றப்பட்டதாகும்.

1944 ஆம் ஆண்டு இவர் Gyldendal’s Endowment விருதையும் , 1955 ஆம் ஆண்டில் Sarpsborg பரிசையும் ,1955-62 ஆண்டுகளில் Dobloug பரிசில்களுக்காக பரிந்துரை செய்யப்பட்டார். இவரது கவிதையான Two tongues , 1972 ஆம் ஆண்டு ப்ரெட் அகர்ஸ்ட்ரோம் என்ற பாடகரால் இசை ஆல்பமாக வெளியாகியது . பின்னர் 2007 ஆம் ஆண்டு சோபியா கார்ல்சன் இவரது கவிதைகளை  Visor från vinden என்ற பெயரில் இசை அல்பமாக வெளியாகியது.

6 ஆம் திகதி பிப்ரவரி மாதம் 1985 ஆம் ஆண்டில் இன்ஜெர் ஹக்ருப் தனது 75 ஆவது வயதில் காலமானார்.

 

(Visited 85 times, 1 visits today)