பல்கனி-மொழிபெயர்புக் கவிதை-ஜிஃப்ரி ஹாஸன்

பலகனி

ஜிஃப்ரி ஹாஸன்

ஞாபங்களின் தாயே!
எஜமானிகளின் எஜமானியே
எனது சந்தோசங்களும் நீயே!
எனது கடமைகளும் நீயே!
அடுப்பங்கரையின் இனிமையை
மாலைப்பொழுதுகளின் வசீகரத்தை
உனது ஸ்பரிசங்களின் அழகினை
நீ மீண்டும் ஞாபகங் கொள்வாய்
ஞாபங்களின் அன்னையே,
எஜமானிகளின் எஜமானியே!
பிரகாசிக்கும் தணல்களால்
ஒளியூட்டப்படுகின்றன
மாலைப் பொழுதுகள் அவை
வெளிர் சிவப்பு நிற பனி போர்த்தியுள்ள
பலகனியில் அந்த மாலைப் பொழுதுகள் ஒளிர்கின்றன
இறக்காத விடயங்கள் பற்றிய
நமது தொடர் பேச்சுக்களின் மத்தியில்
உனது மார்பு எனக்கு எவ்வளவு இனிமையாக இருந்தது
உங்கள் இதயம் மிகவும் வியக்கத்தக்கது!
பிரகாசிக்கும் நெருப்புத் தணல்களால்
ஒளியூட்டப்படுகின்றன
அந்த மாலைப் பொழுதுகள்!
சூரிய அஸ்த்தமனத்தின் போது
சூரியனின் வெப்பக்கதிர்கள் எத்துணை
அழகாக உள்ளன
எத்துணை ஆழமாய் இந்த வெளி உள்ளது
எவ்வளவு பேறுடையதாய்
இந்த இதயசக்தி அளிக்கப்பட்டள்ளது
அன்பின் அரசியே,
நான் உன்பக்கமாக சாய்ந்த போது
உனது உடலின் அனைத்து நறுமனங்களையும்
நுகர்ந்தேன்.
சூரிய அஸ்த்தமனத்தின் போது
சூரியனின் வெப்பக்கதிர்கள் எத்துணை
அழகாக உள்ளன.
இறுக்கமாக மூடப்பட்ட சுவற்றில்
இரவு கருமையேறி இருந்தது
இந்த இருளிலும்
உனது கண்களின் கருமணிகளை
எனது கண்களால் இன்னும் உற்று நோக்க முடிகிறது
மேலும் உனது மூச்சுக் காற்றை
முழுவதும் உறிஞ்சிக் குடித்து விட்டேன்
ஓ! இனிமையே
ஓ! விசமே!!
எனது சகோதரத்துவக் கரங்களில்
உனது பாதங்கள் தூங்கியபடி
கிடக்கின்றன
இறுக்கமாக மூடப்பட்ட சுவற்றில்
இரவு கருமையேறி இருந்தது.
பேரின்பத் தருணங்களைத் தூண்டும்
கலை எனக்குத் தெரியும்
உனது முழங்கால்களுக்கிடையில்
தழுவியிருக்கும் எனது கடந்த காலத்தை
நான் விடுவித்து விட்டேன்
அந்த உறுதிமொழிகள்! அந்த வாசனைகள்!
அந்த முடிவற்ற முத்தங்கள்!
நதியின் ஆழத்தில் மூழ்கிக் குளிக்கும்
அதன் குளியலிலிருந்து
வானத்தில் உயர்கின்ற புதுப்பிக்கப்பட்ட
சூரியன் போன்று மிக ஆழமான குடாவிலிருந்து
மீண்டும் அவை வெளிக்காட்டப்படுமா?
ஓ உறுதிமொழிகளே! வாசனையே! முடிவற்ற முத்தங்களே!

சார்ல்ஸ் பௌட்லயர் 

ஆங்கில வழி தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாஸன்

000000000000000000000000000000

வாழ்வையும், அன்பையும், மரணத்தையும் அற்புதமாய் பாடிய பிரெஞ்சுக் கவிஞன்  Charles Baudelaire (1821-1867)

பிரெஞ்சு கவிஞரான சார்ள்ஸ் பௌட்லயரின் தந்தை பிரான்சிஸ் பௌட்லயர் ஒரு மதப் பிரச்சாரகராகவும்  பின்னர் ஒரு சிவில் சேவையாளராகவும் இருந்தவர். பௌட்லயரின் தந்தை தனது 60 ஆம் வயதுகளில் மரணமானார். அப்போது பௌட்லயருக்கு வயது 6. பின் அவரது தாய் ஜெனெரல் ஒப்பிக் (General Aupick)  என்பவரை மறுமணம் புரிந்தார். பின்னர் அவர் ஃப்ரெஞ்சுத் தூதுவராகவும் பதவியுயர்வு பெற்றிருந்தார்.

பௌட்லயர் தனது தாயை விட்டுப் பிரிந்து பள்ளி விடுதியில் தங்கி இருந்து படிக்க வைக்கப்பட்டார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்த பின் அவரது தாயின் கணவரான (stepfather) ஒபிக்கின் உதவியினால் கிடைத்த இராஜதந்திர பணியை நிராகரித்தார். அவர் லத்தீன் காலாண்டு இலக்கிய இதழொன்றின் இளம் விருந்தினராக இருந்து எழுத்தாளராக விரும்பினார். ஜெனரல் ஒபிக்கின் அழுத்தத்தினால் குடும்ப சபை அவரை 1841 ல் இந்தியாவுக்கு அனுப்புவதற்கு முடிவு செய்தது. வெளிநாட்டுப் பயணத்தை விரும்பாத பௌட்லயர் ரீயூனியன் தீவு (Isle of Reunion) இல் கப்பலிலிருந்து குதித்து மீண்டும் பரிஸ் வந்து சேர்ந்தார். இப்போது மேஜர் பருவத்தை அடைந்திருந்த அவர் தனது தந்தையின் எஸ்டேடில் வாரிசுரிமை கோரினார்.

அவர் நடிகை ஜீன் டுவலில் ஈடுபாடுள்ளவராக மாறினார். பல தொல்லைகளுக்குமிடையே அவர் அவளது காதலனாகத் தொடர்ந்தார். அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையால் அதிக கடன் தொல்லைக்குள்ளானார். அவருடைய அசாதாரண பகட்டு வாழ்க்கையில் அவரை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவரது குடும்பம்  அவரை ஒரு நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

வாழ்வு வருமானமின்றி கதியற்று, அவமானப்படுத்தப்பட்டு, கடன் தொல்லைகளோடிருந்த நிலையில் தான் இவர் வாழ்வு பற்றி அறிந்து கொள்ளும் வேட்கையுடன் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

ஒரு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்ட அவர் தனது தாயுடன் தற்காலிகமாக இணைந்திருந்தார். 1846 எட்கர் ஆலன் போவின் முதல் மொழிபெயர்ப்பாளராக மாறினார். அடுத்து வந்த ஏழு ஆண்டுகளும் அவர் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டார். 1848 புரட்சியையடுத்து ஒரு பத்திரிகையாளராகவும், விமர்சகராகவும் இயங்கத் தொடங்கினார்.

நோயினால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர் 1866 ல் பெல்ஜியத்தில் இருந்த போது வாத நோயினால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட பேச முடியாத நிலைக்குள்ளானார். 1847 ஆண்டு பௌட்லயர் அவரது தாயின் மடியில் தனது 47வது வயதில் மரணித்தார்.

அவரது படைப்புகளில்   Les Fleurs du mal (The Flowers of Evil) என்பதே மிகவும் புகழ்பெற்ற படைப்பாக கருதப்படுகிறது. இது 19ம் நூற்றாண்டில் கைத்தொழில்மயமாகி வந்த நவீன பாரிஸின் இயற்கை அழகில் ஏற்பட்டு வந்த மாற்றத்தை வெளிப்படுத்தும் படைப்பாக கருதப்படுகிறது.

அவரது ‘பல்கனி’ (லு பல்கொன்) எனும் இக்கவிதையானது அவர் இழந்து போயிருந்த அன்புக்கான ஏக்கத்தையும், அதன் வலியையும் அவரது நீண்ட ஞாபகங்களிலிருந்து அவர் வெளிப்படுத்துவதையும் அவரது தாயிடம் அவர் மீண்டும் ஒரு குழந்தையைப் போல் அன்பைக் கண்டு கொள்வதையும் பற்றிப் பேசுகிறது.

(Visited 93 times, 1 visits today)