“இறந்து போனவர்கள்………”- கவிதை மொழிபெயர்ப்பு-தமிழில் -ரூபன் சிவராசா

ரூபன் சிவராசா

கதவைத் திறந்துவிட்டபடியே
படுக்கைக்குச் சென்றிருந்தேன்
அவர்கள் எல்லோரும்
சட்டென என் தூக்கத்திற்குள்
புகுந்துகொள்ளக் கூடுமென்று
எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
ஆம் இறந்துபோனவர்கள்

இனிமேல் இந்தப்பூமியில்
இடமற்றுப் போனவர்கள் அவர்கள்!
இந்த அறையின் நடுவில்
உருகிக்கொண்டிருப்பது பனிக்கட்டி அல்ல!
நான்தான் அது!

அவர்களோடு
குடும்பப்படம் எடுப்பதற்குத்
தயாராகிக் கொண்டிருப்பது போல்
இறுதிச்சடங்குப் போர்வைகளால்
நூறுமுறை சுற்றுண்டு கிடக்கிறேன்.

அவர்கள் எல்லோரும் போய்விட்டனர்
மகள்கள்
மகன்கள்
என்னவர்
பெற்ற மனம்
அதன் திருப்தி
பாட்டன் பாட்டி
அவர்களுடைய
பழைய படங்கள்

கைநிறைய
மழலைப்பேச்சின் ஈரம் காயாத
குழந்தைகளின் பொம்மைகள்.
கம்பழிவிரிப்புகள்
பாய்கள்
மெத்தைகள்
இவையனைத்திலும்
தினசரி அரட்டைகளின்
தடங்கள்
எதுவும் விட்டுவைக்கப்படவில்லை!
எல்லாமும் போய்விட்டன!

அவர்கள் அருந்திய கடைசித் தேநீரின்
வாசனையைச் சேகரித்துவையுங்கள்
அத்தோடு
ஒழுங்கற்றுச் சென்ற
பெருவாகனம் போல
அவர்கள் சென்ற பாதைகளைப்
பிரதிபலிக்கும்
ஒரு கண்ணாடியையும்!

ரூபன் சிவராசா

 

(Visited 81 times, 1 visits today)
 

One thought on ““இறந்து போனவர்கள்………”- கவிதை மொழிபெயர்ப்பு-தமிழில் -ரூபன் சிவராசா”

Comments are closed.