வறுமையின் குழந்தை- மொழிபெயர்ப்பு கவிதை-ஜிஃப்ரி ஹாசன்

ஜிஃப்ரி ஹாசன்

அது மிகவும் விநோதமானது
அவர்கள் பீட்ஸா,இறைச்சி ரொட்டி
கோழிக்கறி,இறைச்சி பற்றி
பேசுகிறார்கள்
ஆனால் அதஸ்ன் சுவை என்னவென்று
எனக்குத் தெரியவில்லை
‘கூடுதல் எடை ‘ எடை என்னவென்றும்
நான் அறியேன்
எனக்கு ‘ஒல்லியான’ என்பது என்பதைப் பற்றி மட்டுமே தெரியும்
எல்லோரும் என்னை அப்படித்தான் அழைக்கின்றனர்
எனது உணவு மிகச்சிறப்பானது,வியப்பானதுங்கூட!
இப்படி உண்பதற்கு எந்த ஒழுங்கும் தேவையில்லை
இங்கே கிடைப்பது தண்ணீரும் வெறும் பாணும் தான்!
இவையன்றி வேறெதுவும் நான் உண்டதில்லை

சென்ற இரவு மருத்துவர் என் தந்தையிடம்
சொன்னார்
‘உங்கள் குழந்தைக்குப் போசாக்கு தேவை’
ஆனால் எனது தந்தைக்கு அவரது பணம்
இன்னுங் கொஞ்சம் போதைக்கும் ஹெரோயினுக்கும் தேவை
நாங்கள் வறியவர்களாய் இருந்தோம்
தந்தை கவலையானார்
ஏழ்மை உண்மையில் அவரை
ஒரு பைத்தியக்காரனாக்கியது
அவர் தீயவற்றின் அடிமையானதும் அன்பு விட்டுச் சென்றது
எங்கள் வீடோ ஒரு பிளாஸ்ரிக் பங்குதான் !
உண்மையில் எனது காயங்களை
கடவுளால் மட்டுமே சுகப்படுத்த முடியும்
நான் வறுமையின் குழந்தை
பசி மட்டுமே என் உற்ற நண்பன்!

மூலம் : மார்ட்டின் ( ஆப்பிரிக்கா )

தமிழில்: ஜிஃப்ரி ஹாசன்-இலங்கை

ஜிஃப்ரி ஹாஸன்

(Visited 92 times, 1 visits today)