ஒரு கடிதம்-மொழிபெயர்ப்புக்கவிதை-தேவ அபிரா

ஒரு கடிதம்

என்னைப் பரணுக்குள் இருக்கும் புத்தகம் அல்லது ஒர் ஒப்பந்தக்கோர்ப்பு; அல்லது ஒரு
பாசுரப்புத்தகம் என நீங்கள் எண்ணக்கூடும்
காமசூத்திரத்தினொரு அத்தியாயமாகவோ வேதனைகளை உண்டுபண்ணும் செய்வினையின் வார்த்தைகளாகவோ நான் இருக்கக் கூடும் எனவும் நினைக்கலாம்.
நானோ இவை எதுவுமில்லை.
அவ்வாறிருந்திருப்பின் எவராவது வாசித்திருப்பார்கள்.
புரட்சியாளர்களின் கூட்டமொன்றில் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றின் கையெழுத்துப்பிரதி
நான்.
காவற்றுறையின் இலச்சினையென்மீதிருந்தது.
புரட்சியாளர்களால் ஒருபோதும் இத்தீர்மானம்
வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
காவற்றுறை விசாரணைகளுக்காக மட்டுமே நான் பத்திரப்படுத்தப்பட்டிருந்தேன்.
தமது அலகிடுக்குகளுக்குள் வைக்கோலை சுமந்து வரும் புளினிகள் எனதுடலில் அமர்ந்து
கொண்டு அடுத்த தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுகின்றன. (அடுத்த தலைமுறையை எண்ணிக்கவலைப்படுதல் என்பது எவ்வளவு உன்னதமான உணர்வு.)
புளினிகளிடம் சிறகுகள் இருக்கின்றன ஆனால் தீர்மானங்களுக்குச் சிறகுகள்
இருப்பதில்லை. (அல்லது தீர்மானங்களுக்கு இரண்டாவது தலைமுறை இருப்பதில்லை.)
என் எதிர்காலத்தில் என்னவிருக்கிறது? அதன் வாசனையை நுகரச் சிலவேளைகளில்
முயற்சிக்கிறேன்
கவலை என் பிணைப்புக்களை வலுவாக்குகிறது
எதிர்காலத்தை முகர முயசிக்கும் பொழுதெல்லாம்
பறவை எச்சத்தின் துர்வாசமே வீசுகின்றது.
பூமியே! உனது எதிர்காலம்..?
இக்கணத்தில் உன்னிலையும் என்னிலையும் ஒன்றுதான்.

000000000000000000000

வெற்றிடம்

அங்கே இரண்டு இராச்சியங்களே இருந்தன.
முதலாவது என்னையும் அவனையும் துரத்தி விட்டது.
இரண்டாவதை நாங்களே கைவிட்டுவிட்டோம்.
வெறுமையான வானத்தின் கீழ்
நெடுங்காலமாக எனதுடலின் மழையில் நான் நனைந்தூறியிருந்தேன்.
அவனோ நெடு நாட்களாகத் தனதுடலின் மழையிலுக்கிப்போயிருந்தான்.
பல வருடங்களின் காதலையும் விருப்பையும் நஞ்செனவருந்திய பிறகு
நடுங்கும் கரத்தால் என் கையைப்பற்றிக் கூறினான்: “ வா! ஒருகணம் எங்களின் சிரங்களுக்குமேலொரு வானம் சமைப்போம்.
அதோ பார், அப்பாலுக்குமப்பால் உண்மைக்கும் பொய்யுக்குமிடையில் ஒரு சிறு வெற்றிடமுள்ளது. ”

000000000000000000000000

பஞ்சாபி மூலம் : அம்ரிதா ப்ரிதம்( Amrita Pritam)

நாவலாசிரியர் கவிஞர் கட்டுரையாளர் எனப் பன்முகம் கொண்ட அம்ரிதா ப்ரிதம் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான பஞ்சாபி எழுத்தாளர். 1919 ஆண்டு பிறந்து 2005 ஆண்டு மறைந்தார்.

ஆங்கில மொழிபெயர்ப்பு: ட்றேசி & மோகன் ட்றேசி (D.H Tracy & Mohan Tracy)

தமிழ் மொழிபெயர்ப்பு: தேவ அபிரா-ஹொலண்ட்

00000000000000000000000000

A Letter

Me—a book in the attic.
Maybe some covenant or hymnal.
Or a chapter from the Kama Sutra,
or a spell for intimate afflictions.
But then it seems I am none of these.
(If I were, someone would have read me.)
Apparently at an assembly of revolutionaries
they passed a resolution,
and I am a longhand copy of it.
It has the police’s stamp on it
and was never successfully enforced.
It is preserved only for the sake of procedure.
And now only some sparrows come,
straw in their beaks,
and sit on my body
and worry about the next generation.
(How wonderful to worry about the next generation!)
Sparrows have wings on them,
but resolutions have no wings
(or resolutions have no second generation).
Sometimes I think to catch the scent—
what lies in my future?
Worry makes my binding come off.
Whenever I try to smell,
just some fumes of bird shit.
O my earth, your future!
Me—your current state.
[Translated from the Punjabi by D.H. Tracy & Mohan Tracy]
00000000000000000000
Empty space
There were two kingdoms only:
the first of them threw out both him and me.
The second we abandoned.
Under a bare sky
I for a long time soaked in the rain of my body,
he for a long time rotted in the rain of his.
Then like a poison he drank the fondness of the years.
He held my hand with a trembling hand.
‘Come, let’s have a roof over our heads awhile.
Look, further on ahead, there
between truth and falsehood, a little empty space.’

Amrita Pritam

(Visited 156 times, 1 visits today)