நினைவு மந்திரம்-கவிதை-கே.முனாஸ்

நினைவு மந்திரம்

என்னை நீ நினைவுபடுத்தும் போது
நான்,சட்டென்று குளிர்ந்தோடும் நீர்த்துளியாகிறேன் உன்னில்.

நீண்ட நம்தூரத்தைக்கடந்து,
நீ வாசிக்கும் நூலாகிக்கதைக்கிறோம்
வார்த்தைகளின்றி வெறும் பார்வைகளால்.

பின், உன் வுழுநீராகி முகத்திலும் கையிலும் ஈரலிக்கிறேன்
நம்மீரலிப்பு உடம்பெங்கும் பரவிக்கிடக்கிறது.

பரவலில், சிலிர்க்கும் உன்னில் மிருதுவாகத்தடவி
ரோம கண்ணிடுக்கில் மறைத்து வைக்கிறாய் என்னை.

மறைப்பில், உன்னந்தரங்க உள்நெகிழ்ச்சி சுரந்து வடிகிறது
பெருக்கெடுக்கும் போதையில்
என்னை உன் எல்லா இடுக்குகளுக்கும் மிருதுவாக
அனுப்பி வைக்கிறாய்.

உன் மென்மையிலும் அந்தரங்கத்திலும்
கசிந்து கிடக்கிறோம் நாம்.
மூழ்களிலிருந்து விடுபடுமென்னை,
தலை கோதி, நீ பெயர் சொல்லி,
காதருகில் மெல்லக்கூப்பிடுகையில்
நம்நினைவு கசிவுகளைப்பீச்சுகிறது மீண்டும்.

தொழ விரித்த முஸல்லாவில்
மல்லாந்து கிடக்கும் நம் நிவைவில்,
உன்னிரு கால் மடக்கி செய்யும் சுஜூதில் நானும் நீயும் சங்கமம்.

இந்த ஒன்றினைவில்,
உன்னினைவேறிய என்னை வாதைசெய்யும் மந்திரம் நீ.

000000000000000000000000

• வுழுநீர்: முஸ்லிம்கள், தொழுகைக்கு தயாராகுவத்ற்கு பாவிக்டும் நீர்.
• முஸல்லா: முஸ்லிம்கள், தொழுவதற்கு உபயோகிகும் விரிப்பு.
• சுஜூது: இஸ்லாமியத் தொழுகையில், நெற்றியை தரையில் வைத்து, இறைவனை நன்றி செய்யும் தருணம்.

கே. முனாஸ்-இலங்கை

(Visited 102 times, 1 visits today)